அந்தமான்-நிகோபார் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் விரிகுடா அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இரவு 8:35 மணியளவில் 63 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இதற்கு முன்னதாக செப்டம்பர் 22 அன்று, ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவிலான நிலநடுக்கம் இந்த தீவுகளில் ஏற்பட்டது […]
இன்று அதிகாலையில் அந்தமான் நிக்கோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.25 மணியளவில் சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு போர்ட் பிளேயரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சேதங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகரமாகிய போர்ட் ப்ளைர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நில அதிர்வுகள் தேசிய மையம் கூறுகையில் 4.3 ரிக்டர் அளவிற்கு 10:47 மணி அளவில் போர்ட் ப்ளைர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த […]