இங்க பாருங்க ! செகண்ட் ஹேண்ட் கார் வாங்க 3 மாத ஆண் குழந்தை விற்பனை

Default Image

உத்திரபிரதேசத்தில் கார் வாங்க 1.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெற்றோர்.

உலகெங்கும் கொரோனா பரவி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பிணங்களை எறிக்க ஆங்காங்கே மக்கள் வரிசைகட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவதற்கு தான் பெற்ற பிள்ளையை தொழிலதிபர் ஒருவரிடம் உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் விற்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குழந்தையின் தாய்வழி தாத்தா பாட்டி போலீஸ்காரர்களை அணுகி பெற்றோருக்கு எதிராக புகார் அளித்ததையடுத்து, புதிதாகப் பிறந்த 3 மாத குழந்தையை விற்றுவிட்டதாக வியாழக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

குழந்தையின் தாத்தா பாட்டி பகிர்ந்து கொண்ட தகவல்களின்படி, 3 மாத குழந்தை குர்ஷாஹைகஞ்ச் நகரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனத்திற்காக விற்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்ற போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் சீனாவிலும் அறங்கேறியுள்ளது, சீனாவின் ஜெஜியாங்கில் ஒரு நபர் சமீபத்தில் தனது இரண்டு வயது மகனை விற்றுள்ளார், பின்னர் அந்த பணத்தை வைத்து வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தனது 2 வது மனைவியுடன் சண்டையிட்டு குழந்தை பராமரிப்பு சுமையால் பெற்ற மகனை விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History
R Ashwin praise Himanshu sangwan
BJP MLA Vanathi Srinivasan
tamilnadu gold store purchsae
Chennai Snow Fall