சீனாவில் உள்ள ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயுவை சுவாசித்ததில் 8 பேர் இறந்தனர், 3 பேர் நோய்வாய்ப்பட்டனர். தென் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் நேற்று ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு கசிந்ததையடுத்து, அதை சுவாசித்தவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாகாண தலைநகர் குயாங்கில் உள்ள காவல்துறையினருக்கு அதிகாலையில் ஒரு ரசாயன நிறுவனத்தின் அருகே சிலர் மயக்கத்தில் கிடந்ததாக தகவல் கிடைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து […]
டெல்லியின் கல்காஜியில் 32 வயதுடைய நபர் தனது தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொலை செய்துள்ளார். டெல்லியில் ஒரு நபர் குடும்ப பிரச்சனையில் தன் தம்பியை உடற்பயிற்சி செய்யும் டம்புல்ஸ் மூலம் அடித்துக்கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தென்கிழக்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் நேற்று முன்தினம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அஜய் குமார் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் உத்தரபிரதேசத்தில் ரே பரேலியைச் சேர்ந்தவர், இறந்த சகோதரர் விஜய் குமார் […]
கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே வர அச்சப்பட்டாலும் […]
கோவா மருத்துவமனையில் 1 மாத குழந்தையை திருடிய பெண்ணை போலீஸ் தேடி வருகின்றனர். கோவா மாநிலத்தின் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஒரு மாத குழந்தை கடத்தப்பட்டது, இதையடுத்து கோவா போலீஸ் மாநில அளவில் கடத்தல் காரர்களை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குழந்தையை கடத்திய பெண் ஒரு நபருடன் ஸ்கூட்டரில் ஏறி செல்வதை சி.சி.டி.வியில் கண்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகள் […]
டெல்லியில் இன்று மட்டும் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது, இறப்புகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா போரில் வெற்றியையும் கண்டுள்ளது […]
டெல்லியில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 300 க்கும் கீழ் பதிவாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது, இறப்புகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா போரில் வெற்றியையும் கண்டுள்ளது கெஜ்ரிவால் […]
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களுக்கு சீனா அழைப்பு. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு முதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சீனா அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று சீன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவானியர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் தைவான் தடைகளை நீக்கி அதன் மக்களை “மிகவும் பயனுள்ள” சீன தடுப்பூசிகளை பெற அனுமதிக்குமாறு அந்நாட்டுக்கு சீனா […]
ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம். ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் […]
ராஜஸ்தானில் 13 வயசு சிறுமி அரசு பள்ளி ஆசிரியரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தின் ஷெர்கர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது 13 வயது மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமி மொகம்கர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்த சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்துள்ளது. சிறுமி வயிற்று வலி இருப்பதாக புகார் அளித்து, அவரது பெற்றோரால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 15,759 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,759 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,24,597 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,094 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 378 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிறந்த நாளை ஜூலை 12 என கூகுள் தவறாகக் காட்டியதாக புகார்.. கூகுள் மற்றும் ஆல்பாபெட் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாயின் பிறந்தநாளைத் தேடும்போது, சிலருக்கு கூகிளில் மிகவும் வித்தியாசமான பதில் கிடைத்தது என பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சுந்தர் பிச்சை என்பவர் கூகுள் மற்றும் பாரண்ட் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் இவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இவர் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை […]
நோய்த்தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் என்று திமுகவினருக்கு முதல்வர் கடிதம்… தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் மற்றும் மேட்டூர் அணை நீர் திறப்பு ஆகிய பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். இதையடுத்து திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட பிறகு சென்னை திரும்பிவிடுவார். இந்த சூழலில் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் […]
டெல்லியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி டெல்லி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஏப்ரல் 12 ம் தேதி டெல்லி அரசு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 16,813 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 16,813 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,08,838 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,223 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 358 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
கொல்கத்தாவில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடந்த மோதலில் பஞ்சாப் குண்டர்கள் கொல்லப்பட்டனர். நேற்று கொல்கத்தாவில் உள்ள நியூ டவுனில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே இரண்டு பஞ்சாபைச் சேர்ந்த மோஸ்ட் வாண்டட் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கம் என்கவுண்டரில் ஒரு சிறப்பு பணிக்குழு அதிகாரியும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள நியூ […]
சிங்கப்பூர் மக்கள் டெல்டா வகை உருமாறிய வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தகவல். சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானோர் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய டெல்டா வகை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை உருமாறிய வைரஸ் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பை உயர்த்திக் காட்டுகிறது என்றும் சுகாதார அமைச்சகத்தின் குறிப்பிடுகின்றன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸில் டெல்டா வகை மோசமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கொரோனா 2 […]
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 337 பேராக பதிவாகியுள்ளனர். டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டியது. மேலும் கொரோனா தொற்று பரவலை ஊரடங்கை அமல்படுத்தி பாதிப்பை குறைத்து டெல்லி கெஜ்ரிவால் அரசு வெற்றியைக் கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 337 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 36 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளதாக டெல்லி […]
பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் வாஷுக் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை மாவட்டத்தின் மாஷ்கெல் பகுதியின் உதவி ஆணையர் ஹமீத் ஹம்சா பாங்குல்சாய் பகிர்ந்து கொண்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாஷுக் மாவட்டத்தின் மாஷ்கெல்லில் ஒரு வெல்டிங் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 17,321 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,321 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,92,025 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,345 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 405 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
மியான்மரில் வன்முறையால் 1,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல். பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் நடத்தியதால் அவர்கள் இடம் பெயர்வதற்கு காரணம் என கூறப்பப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று மியான்மரின் கயா மாநிலத்தில் 1,00,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மீது “பாதுகாப்புப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள்” அவர்கள் இடம் பெயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் “மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அங்கு விரைவாக […]