தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில், இன்று 97 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று உயிரிழந்த 97 பேரில், தனியார் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.