இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் .
அவரது கடிதத்தில் ,ஓபிசி என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நடக்கும் நியமனங்களில் 27 % இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்கிறது. ஆனாலும் ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைக்கு உட்பட்டவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது.
கிரிமீலேயரில் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கிடக் கூடாது .இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிரிமீலேயரில் திருத்தம் கொண்டு வந்தால் தகுதியானவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.