மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று – மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Fishermen have been warned by the Meteorological Department not to go to sea as the cyclone is expected to reach 40-50 kmph.

மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்டுகின்றனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில நீடிப்பதால், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக அதே இடத்தில நீடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பல கடலோர மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சூறாவளிக்காற்று மணிக்கு 40-5 0 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் குமரிக்கடல், மன்னர் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும், கேரளா கடலோர பகுதி, லட்ச தீவு மற்றும் மாலத்தீவு ஆகிய கடலோர பகுதிகளுக்கு அடுத்த 2 தினங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.