சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் […]
மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்டுகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில நீடிப்பதால், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக அதே இடத்தில நீடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பல கடலோர மாவட்டங்களுக்கு […]
புரேவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக வலுவடைந்ததையடுத்து புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயல் சுமார் பாம்பனுக்கு கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த […]
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் என் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் […]