கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திண்டுக்கல், சென்னை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திண்டுக்கல், சென்னை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவம் மக்கள் மத்தியில்,அச்சத்திற் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இதற்க்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள். இது தமிழகமா? வடமாநிலமா? தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம். கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம். காவல்துறையை வைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு, சுயவிளம்பரத்திற்கு மட்டும் நேரம் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழகமா, வடமாநிலமா?
தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்!
காவல்துறையை வைத்திருக்கும் @CMOTamilNadu-க்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா? pic.twitter.com/gn84Fnl45H
— M.K.Stalin (@mkstalin) November 16, 2020