குட் நியூஸ்! தமிழகத்தில் ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10585 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் கொரோனாவுக்கு பலியாகிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் இன்று ஓரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இதுவரை கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3538 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 6970 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.