நிவர் புயல் எதிரொலி : தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல்!

The Tamil Nadu-Puducherry border has been sealed to prevent accidents due to Nivar storm. nivar strom people safe

நிவர் புயல் காரணமாக விபத்துகளை தடுக்க தமிழக – புதுச்சேரி எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சேதங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல இடங்களில் நிவாரண பொருட்களுடன் தயாராக உள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் புதுப்பித்து எனும் இரு மாவட்டங்களையும் இணைக்கும் பாலத்திலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதை தவிர்க்க இவ்வாறு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.