கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை 

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை  மேற்கொண்டுள்ளார்.

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை  மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, தற்போது திருமழிசையில் தற்காலிக  காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் , இங்கு போதுமான வசதி இல்லை எனவும் கூறி மீண்டும் கோயம்பேடு சந்தையை  திறக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர்  தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இன்று கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .இந்நிலையில்கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை  மேற்கொண்டுள்ளார்.