சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 […]
சென்னை : வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (21/10/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருக பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சென்னை : அக்டோபர் 31-ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் […]
மீண்டும் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனை அடுத்து, […]
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லாததால், கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றும் அவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தர வேண்டும் எனவும் உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு […]
நாளை முதல் ஆம்னி பேருந்துகளை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்றிரவு 7 மணிக்கு மேல் சென்னை நகருக்குள்ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது இன்றே கடைசி நாள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். […]
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அன்று மலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று […]
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒருநாள் பாதிப்பு 9,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் […]
பேருந்து போக்குவரத்துக்கு சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டாத நிலையில், தங்களின் கோரிக்கைகளை […]
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. சந்தைக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் […]
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, தற்போது திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் , இங்கு போதுமான வசதி இல்லை எனவும் கூறி மீண்டும் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று கோயம்பேடு […]
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும், 1,300-க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், வாகனங்களை திரும்ப பெறும் பொதுமக்களிடம் 55 நாட்களுக்கும் வாடகை […]
அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது பேசப்பட்ட முடிவுகளைபற்றி செய்தியாளர்களை சந்தித்து கூறினார். மேலும், கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு […]
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட திருமழிசை மார்க்கெட் இன்று திறப்பு ! சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் கடந்த மே 5ம் தேதியுடன் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கியுள்ளனர். இந்த தற்காலிக மார்க்கெட் நாளை முதல் பல விதிகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட்டில் 200 கடைகள் இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் 20அடி இடைவெளி இருகிறது. ஒரு கடைக்கு […]
கொரோனா பரவும் மையமாக மாறி வரும் கோயம்பேடு மார்க்கெட்டை நாளை முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்ததால் தமிழகத்தில் இதுவரை 1409 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட […]
கோயம்பேடு சந்தையால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் […]
கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா இருந்துவந்தது. இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தற்போது கொரோனா சிகிச்சைககா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று மட்டும் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில், நேற்று மட்டும் 94 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி […]
சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவந்த அரியலூரை சார்ந்த கூலித் தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோயம்பேட்டில் ஏற்கனவே ஏழு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வேலை செய்து வந்த அரியலூர் தொழிலாளிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 27 […]
நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழச்சந்தை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயப்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரி, சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சமீபத்தில் பூ வியாபாரிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தையை 3 ஆக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் கடைகளை அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சென்னை மாநகர் ஆணையர் பிரகாஷ் […]