சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் சிறுநீரகம் மற்றும் இதைய பிரச்சனை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.சற்றும் முன்னேற்றத்தை கண்ட அவர் உடல் கடந்த இரு நாட்களாக அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இந்நிலையில், இன்று காலை 8.05 மணி அளவில் ஜெ.அன்பழகன் காலமானார்.
ஜெ.அன்பழகன் இறப்புக்கு இரங்கல் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் முன்னோடி நிர்வாகியுமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் முன்னோடி நிர்வாகியுமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 10, 2020
திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 10, 2020