கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த விவகாரம்.. 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இரண்டு பெண்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இரண்டு பெண்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி, 10ம் வகுப்பு படித்து வரும் அவரின் மகனுக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக கடந்த 7ம் தேதி சென்னையில் இருந்து தாய் மற்றும் தாயின் தங்கை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்பொழுது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், அந்த மாணவனின் தாய் மற்றும் அவரின்தங்கைக்கு மருத்துவ பிரிசோதனைக்கு அழைத்தபோது, அவர்கள் வர மறுத்துள்ளனர்.

அவர்கள் பின்னர் நடந்த போராட்டத்திற்கு பின், அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருகுல ராமன் அளித்த புகாரில், பரிசோதனைக்கு வர மறுத்த பெண்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.