Corona virus : தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை !

தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. நேற்று கோவை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை,நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர் ஆகிய 16மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

unknown node
Corona virus : தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை !