கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது திருப்பூர் !

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ள நிலையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருப்பூரில் இன்று 2 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரேனா பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது திருப்பூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதுள்ளது.