சென்னை நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. முதல்வர் ஆலோசனை!

சென்னையில் கொரோனா பாதிப்பு 15,770ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகராட்சி அலுவகத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு 15,770ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகராட்சி அலுவகத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், நேற்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.எ.எஸ். மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.