#Breaking : சென்னையில் 88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

சென்னையில், இன்று ஒரே நாளில்  1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில், இன்று ஒரே நாளில்  1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில்  சென்னையில் இன்று ஒரே நாளில் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 14,952  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,475  ஆக உயர்ந்துள்ளது.

#Breaking : சென்னையில் 88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!