#Breaking : தமிழகத்தில் 960 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு !

தமிழகத்தில் 960 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் 960 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,496 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5804 பேர் குண்மடைந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், தமழகத்தில்  கொரோனா வைரஸால் 1865 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 960 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நிலவரப்படி 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை சிறப்பாக இருக்கிறது. இது மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியது.