திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தையை நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருமான ஓ .பன்னிர்செல்வம் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா தொற்று அதிகம் பரவத் தொடங்கியதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், திருமழிசைக்கு காய்கறி மார்க்கெட் மாற்றுவதாக சி.எம்.டி.ஏ. அறிவித்தது. அதன்படி, திருமழிசையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை சமப்படுத்தி ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
unknown nodeஇந்நிலையில், நாளை நள்ளிரவு முதல் சந்தை இயங்க உள்ள நிலையில், திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை, நாளை மாலை 4:30 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருமான ஓ .பன்னிர்செல்வம் ஆகிய இருவரும்ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.