நாகை வேளாங்கண்ணி மாதா கோவில் பிராத்தனையில் முதல்வர் பழனிசாமி!

Chief Minister Edappadi Palanisamy has participated in the prayers held at the Velankanni Mata Kovil in Nagai district today

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

நிவர் மற்றும் புரவி புயல் குறித்ததான வெள்ள பாதிப்புகளை அறிந்து கொள்வதற்காக முதல்வர் நேற்று கடலூர் சென்று ஆய்வுகளை முடித்துக்கொண்டு இரவு நாகை வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று தங்கியிருந்தார். இன்று நாகையில் வெள்ளம் குறித்ததான ஆய்வை துவங்குவதற்கு முன்னதாக நாகை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற காலை நேர பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்றுள்ளார்.

முதல்வருக்கு பேராலயம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், மாதா சொரூபம் வழங்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி மாதா ஆலய பாதிரியார் அவர்கள் முதல்வருக்கு ஆசி வழங்கியுள்ளார். அதன் பின் மாத சொரூபத்துக்கு தான் கொண்டு வந்திருந்த மாலையை முதல்வர் கொடுத்துள்ளார். அதன் பின் கருங்கண்ணி பகுதியில் விளை நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அருந்தவம்புலம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.