சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகள்! அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்!

சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகளால் சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள்.

சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகளால் சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள்.

கோடைகாலம் துவங்கியுள்ள  நிலையில், புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் உள்ள இலவம் பஞ்சு மரங்கள் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனையடுத்து, அந்த பகுதியில் காலையில் பலத்த காற்று வீசியுள்ளது.

இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள இலவம் பஞ்சு மரங்களில் உள்ள காய்கள் வெடித்து சிதறியதில், சாலை முழுவதும் பஞ்சாக பரவி காணப்பட்டுள்ளது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி  உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலால் வெளியே வரும் மக்கள் முககவசம் அணிந்து வருவதால், மூக்கிற்குள் பஞ்சுகள் செல்லாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகள்! அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்!