நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம். பருத்தி, நூல் விலையுயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் ஸ்டிரைக்கை தொடங்கியுள்ள நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். பருத்தி, நூல் விலை உயர்வால் […]
பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் இயங்கி வரும் தொழிற்சங்கங்கள் மற்றும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக பிரதமர் […]
பஞ்சு விலை உயர்வால் ஏற்பட்ட கூடுதல் சுமையை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் பொதுமக்கள் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பருத்தி பஞ்சு விலை உயர்வு தொடர்பான விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்து, பஞ்சு விலையை குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும், இந்தத் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது […]
இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், பருத்தி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. பருத்தியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. இதற்கு […]
சாலையில் வெடித்து சிதறிய இலவம் பஞ்சுகளால் சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் உள்ள இலவம் பஞ்சு மரங்கள் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனையடுத்து, அந்த பகுதியில் காலையில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள இலவம் பஞ்சு மரங்களில் உள்ள காய்கள் வெடித்து சிதறியதில், சாலை முழுவதும் பஞ்சாக பரவி காணப்பட்டுள்ளது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், கொரோனா […]