#Breaking:மேலும்,ஒரு மாவட்டத்தில் லீவு விட்டாச்சு...மொத்தம் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

#Breaking: Holidays have been declared for schools in 26 districts in Tamil Nadu today due to heavy rains.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதாலும்,மழை பாதிப்புகளை கருத்தில்கொண்டும் திருபத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மொத்தம் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, குமரி,நாகை, மயிலாடுதுறை,விழுப்புரம்,திருவாரூர், கள்ளக்குறிச்சி,கடலூர், விருதுநகர்,தென்காசி,தேனி,திண்டுக்கல்,திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

மேலும்,ராணிப்பேட்டை,அரியலூர்,வேலூர்,திருப்பத்தூர்,பெரம்பலூர்,தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.