BREAKING: அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.! லாக்டவுன் தளர்வு இருக்குமா..?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, நாளையுடன் முடிவடைய இருந்தது . ஆனால் நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து  உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு , கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.