#BREAKING: தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி..! வி.பி.துரைசாமி.!

சென்னை கமலயத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி  அளித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக

சென்னை கமலயத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி  அளித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்  என கூறினார்.

மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். கடந்த ஆண்டு அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் விபி துரைசாமி கருத்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  அதிமுகVS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜகVS திமுக என மாறிவிட்டது  என்று  வி.பி.துரைசாமி கூறினார்.