#Breaking: அதிமுக-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில்,

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கியுள்ளார். மேலும் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையின் படி, எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுகவுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு  பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.