தமிழகத்தில் இன்று 68 பேர் உயிரிழந்ததால்..மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 15 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி,  இன்று 68 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

unknown node
தமிழகத்தில் இன்று 68 பேர் உயிரிழந்ததால்..மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரிப்பு.!