கொரோனாவால் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3 இளைஞர்கள் பலி .!

சென்னையில் 21, 24, 25 வயது இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 21, 24, 25 வயது இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,276  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

unknown node

சென்னையில் கொரோனாவால் 12.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞர் 14.06.2020 மூச்சு தினறால் உயிரிழந்தார். 13.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது இளைஞர் அதே போல் மூச்சு தினறால் 16.06.2020 உயிரிழந்தார்.  மேலும் 13.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் 16.06.2020 உயிரிழந்தார்.

கொரோனாவால் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3 இளைஞர்கள் பலி .!