#Breaking: கொரோனவால் தமிழகத்தில் 286 பேர் உயிரிழப்பு.. பீதியில் மக்கள்!

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 33,239 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் 9 ஆம் முறையாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

unknown nodeunknown node

மேலும், நிபுணர்களின் கருத்துப்படி, சென்னையில் வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால், 3.47 லட்சம் பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கொரோனா தடுப்பு பணி குறித்து 5 அமைச்சர்கள் கொண்ட கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.