தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 நாட்களில் 2,706 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 நாட்களில் 2,706 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 நாட்களில் 2,706 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 107 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது. அதில் தனியார் மருத்துவமனையில் 42 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் கடந்த 24 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 2,706 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ள நிலையில், இன்று 100- ஐ கடந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 நாட்களில் 2,706 பேர் பலி!