திருவள்ளூரில் 17 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வைட்டமின் டி குறைபாடு  உடைய திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 26.06.2020 அன்று காலை 02.26 மணிக்கு ஒரு தனியார் மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தலைவலி காரணமாக உயிருக்கு போராடி உள்ளார். இந்நிலையில் 27.06.2020 அன்று மாலை 03:20 மணிக்கு இறந்தார் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

unknown node

தமிழகத்தில் 29 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் விகிதம், 1.31 ஆக உயர்ந்துள்ளது.