தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
unknown node