உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்

உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்.

உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்.

கணவன் – மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

ஆனால், இன்று திருமணமாகும் தம்பதியினர் மத்தியில் புரிந்து கொண்டு வாழ்தல் என்பது கேள்விக் குறியாக தான் உள்ளது. இதற்கு காரணம், இன்று பலருக்கு கைபேசி தான் முதல் துணையாய் உள்ளது. தற்போது இந்த பதிவில், உங்கள் கணவர் சிறந்தவர் என்பதை காட்டும் அடையாளங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

நேரம் செலவிடுதல்

unknown node

கணவன் எப்படிப்பட்ட வேலைக்கு சென்றாலும், என்ன மனஅழுத்ததில் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் தாண்டி உங்களுக்காக நேரம் ஒதுக்கி, உங்களுக்கென நேரம் செலவிடுகிறார் என்றால், உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

ஆதிக்கம்

unknown node

இன்றளவு, பெண்களை விட ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு தான் அதிகமாக மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், சமூகம் ஒரு தவறான பழக்கத்தை உருவாக்கி உள்ளது. ஆனால், உங்கள் கணவர் ஆணாதிக்கத்தை தவிர்த்து, உங்களை இரண்டாம் நபராய் பார்க்கலாம், சமமாய் பார்க்கிறார் என்றால் உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர்.

கற்றுக் கொடுத்தல்

unknown node

பொதுவாக ஆண்களை பொறுத்தவரை, அவர்களுக்கென்று ஏதாவது விளையாட்டில் கவனம் செல்லுத்துவந்து. திருமணமான பின் அந்த விளையாட்டை தனது துணையோடு விளையாட விரும்புவதுண்டு. அப்போது அந்த விளையாட்டின் யுக்திகள் உங்களுக்கு தெரியாத பட்சத்தில் அவர் உங்களுக்கு கற்றுக் கொடுத்தால், உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

தவறுகள்

unknown node

உங்கள் கணவர் ஏதாகிலும் தவறு செய்யும் பட்சத்தில், அவற்றை எல்லாம் மறந்து உங்களுக்காக தன்னை மாற்றி, உங்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும் நபராக இருந்தால் உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

மனம் விட்டு பேசுதல்

unknown node

சிலர் உணர்வுகளை வெளிக்காட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியததால், உங்கள் உறவை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தலாம். அவ்வாறு இல்லாமல், எல்லாவற்றையும் வெளிப்படையாக மனம்விட்டு பேசுபவராக இருந்தால் உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.