தெகிட்டாத சுவையில் பன்னீர் பாயாசம் செய்வது எப்படி

This news gives information about How to make paneer payasam-thevidathasuvaiyil paneer payasam seivathu eppdi

பாயாசத்தை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாயாசத்தை விரும்பி உண்பார்கள். மேலும் விழாக்காலங்களில் பாயாசம் இல்லாத விருந்தே இருக்க முடியாது.

தெகிட்டாத சுவையில் பன்னீர் பாயாசம் செய்வது எப்படி?

தெகிட்டாத சுவையில்  பன்னீர் பாயாசம் செய்வது எப்படி என இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)

பால் – இரண்டு கப்

சோள மாவு – 1 டீஸ்பூன்

முந்திரி – 5

ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்

குங்குமபூ – சிறிதளவு

செய்முறை:

unknown node

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை  ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் காய்ந்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும். சோள மாவை கரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அந்த கரைசலை ஊற்றி 1 நிமிடம் நன்றாக கிளற வேண்டும். பின்பு கண்டேன்ஸ்டு மில்க் (அல்லது) சர்க்கரை சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். அதற்கு பிறகு குங்குமபூ, ஏலக்காய் தூள், முந்திரி துண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறி கொதித்தவுடன் இறக்கவும்.

பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடங்கள்  மட்டும் வைத்தால் போதுமானது அதற்கு மேல் வைக்க கூடாது.இப்போது சூடான பன்னீர் பாயாசம் ரெடி.