அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே? உடல் எடையை குறைக்கும் கொள்ளு ரசம்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை தான். நாம் உடல் எடையை குறைப்பதற்காக பல செயற்கையான வழிமுறைகளை தேடி செல்கிறோம். ஆனால், அவை நமக்கு

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை தான். நாம் உடல் எடையை குறைப்பதற்காக பல செயற்கையான வழிமுறைகளை தேடி செல்கிறோம். ஆனால், அவை நமக்கு பக்க விளைவுகளை தான் ஏற்படுத்தும். இயற்கையான வழிமுறைகளை பின்பற்றும் போது, நாம் ஆரோக்கியமான முறையில் நமது உடல் எடையை குறைக்கலாம்.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

unknown node

நமது உடல் எடையை குறைப்பதில் கொள்ளு ரசம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இப்பொது கொள்ளு ரசம் எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

கொள்ளு – 1 கப்

புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

துவரப்பருப்பு (கரகரப்பாக அரைத்து) – 1 மேஜைக்கரண்டி

ரசப்பொடி – 4 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

கடுகு – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

கொள்ளை வெறும் சட்டியில் வறுத்து, அதன் பின் தண்ணீர் ஒற்றி நன்கு அவித்து, அதன் தண்ணீரை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். துவரம்பருப்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை அரைத்து விழுதாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

unknown node

பின், புளிக்கரைசலில் உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் கொள்ளு தண்ணீரை சேர்த்து, நுரை பொங்கி வரும்போது, இறக்கி விட வேண்டும். பின், நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை வதக்கி ரசத்தினுல் போட வேண்டும்.