இப்படி பட்டாணி சாதம் பண்ணி பாருங்க! பிரியாணியே தோற்றுவிடும்!

Pea Rice

பட்டாணியை நம் உணவில் குழம்புகளாகவோ மற்றும் குருமா வகைகளிலும் சேர்த்து பயன்படுத்திருப்போம், வெஜிடபிள் பிரியாணி வகைகளில் கூட சேர்த்து பயன்படுத்தி இருப்போம். ஆனால் இன்று நாம் காண இருப்பது பட்டாணியை  மட்டும் வைத்து சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பட்டை  = இரண்டு
கிராம்பு   = 5
பச்சை மிளகாய்  = ஐந்து
சோம்பு  = இரண்டு ஸ்பூன்
சின்ன வெங்காயம்  = 10
இஞ்சி  = இரண்டு இன்ச்
பூண்டு  = 10
புதினா  = ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி  = சிறிதளவு
பெரிய வெங்காயம்  = ஒன்று
எண்ணெய் = 4 ஸ்பூன்
நெய்  = ஒரு ஸ்பூன்
பட்டாணி  = ஒரு கப்
அரிசி  = இரண்டு கப்
தேங்காய்ப்பால்  = ஒரு கப்

எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொண்டவரா நீங்கள்.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

செய்முறை

மிக்ஸியில் பட்டை, சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் ,இஞ்சி பூண்டு, புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய்  மற்றும் நெய் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போனபின் எண்ணெய்  பிரிந்து வரும் வரை வதக்கவும்.

பிறகு ஊற வைத்த பட்டாணி அல்லது பச்சை பட்டாணியை சேர்த்து அதிலே கிளறவும். அரிசி, அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் நான்கு விசில் வரும்வரை விடவும். இப்போது கம கம வென பட்டாணி சாதம் ரெடி.

பயன்கள்

இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அலர்ஜி மற்றும் ஒவ்வாமையை நம்மிடம் நெருங்க விடாது. புரதம் நிறைந்து காணப்படுவதால் தசைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதயம்

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதயம் படபடப்பு போன்ற போன்ற போன்ற போன்ற போன்ற போன்ற போன்றவற்றை சரி செய்கிறது.

வயிறு

இதில் கரையாத நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது செரிமானத்தை தூண்டும். மேலும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்.

எடை குறைப்பு

கொழுப்பு குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பட்டாணியை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.

அடடே! பத்தே நிமிஷம் போதும் பச்சரிசி பாயாசம் செஞ்சு அசத்த ….

நீரிழிவு உள்ளவர்கள்

தயவுசெய்து குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

கண்

இதில் உள்ள கரோட்டின்  கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் புரை நோய் வராமல் தடுக்கிறது.

சமைக்கும் முறை

  • இதில் உள்ள  பைட்டிக் ஆசிட் அயன், கால்சியம் ,மெக்னீசியம் போன்றவை நம் உடம்பில் சேரவிடாமல் தடுக்கிறது.
  • லைட்டிக் ஆசிட் வாயு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் இதை ஊற வைத்து சமைப்பது சிறந்தது.
  • பட்டாணியை நாம் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமைத்து சாப்பிட்டு உடல் வலிமை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்