வாய்வு, வயிறு உப்புசம் உடனே சரியாக இந்த பொருள் போதும்..!

செரிமானம் -வாய்வு மற்றும் செரிமான பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
- வெந்தயம் =2 ஸ்பூன்
- ஓமம் =1 ஸ்பூன்
- பெருங்காயம் =1/2 ஸ்பூன்
செய்முறை:
வெந்தயம் மற்றும் ஓமத்தை லேசாக வறுத்து ஆறவைத்து அதனுடன் அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து நைசாக பவுடர் ஆக்கிக் கொள்ளவும். எப்போதெல்லாம் வாய் தொல்லை இருக்கிறதோ அல்லது செரிமான தொந்தரவு இருக்கும்போதும் இந்த பவுடரை ஒரு கிளாஸ் சுடு தண்ணீரில் அரை ஸ்பூன் கலந்து உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.உடனடியான தீர்வு கிடைக்கும் .
அது மட்டுமல்லாமல் எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போதும், அதிகமான உணவு உட்கொண்டு விட்டாலோ இதனை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை உணவுக்கு முன் அல்லது பின் என எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.
வெந்தயம் :
நாம் இதில் வெந்தயம் சேர்த்துள்ளதால் உடல் சூட்டினால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் .மேலும் இதில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் வாயு பிரச்சனையும் சரி செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
ஓமம்:
ஓமத்திற்கு செரிமான பிரச்சனையை சரி செய்யும் சக்தி உள்ளது. அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலும் சமையலறையில் முக்கிய பொருளாக ஓமம் உள்ளது. இந்த ஓமத்தை உடல் எடை குறைப்பிற்கும் பயன்படுத்தலாம்.எப்பேர்ப்பட்ட செரிமான தொந்தரவையும் ஓமம் சரி செய்து விடும். ஓமத்தில் உள்ள தைமோன் ஓமத்திற்கு நல்ல வாசனையை தரும்.
ஆகவே வாயு தொந்தரவு ,மலச்சிக்கல் ,செரிமான பிரச்சனை, வயிற்று உப்பசம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பவுடரை மருந்தாக சுடு தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025