நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கீரைகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
தற்போது இந்த பதிவில் வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
உடல்சூடு
unknown nodeவெந்தயக்கீரை உடல்சூட்டை தணிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடல் சூட்டை தனித்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மயக்கம்
unknown nodeநமது உடல்நிலை பெலவீனமாகும் போது, மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். இந்த நேரங்களில் நாம் வெந்தய கீரையை உணவாக எடுத்து கொண்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வாய்ப்புண்
unknown nodeவாய்ப்புண் பிரச்னையுள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயக்கீரையை நீரில் ஊற வைத்து, அந்த நீரை வைத்து வாயை கொப்புளித்து வந்தால் வாய் புண்கள் ஆறிவிடும்.
சர்க்கரை நோய்
unknown nodeஇன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோயால் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.