இரவு உறங்குவதற்கு முன் இந்த டீ குடிச்சிட்டு படுத்தா என்ன நடக்கும் தெரியுமா…?

Herbal tea

நம்மில் பலர் நாம் இரவு உறங்குவதற்கு முன் பல வகை உணவுகளை சாப்பிடுவதுண்டு. சிலர் நீர் ஆகாரங்களை குடித்து விட்டு படுப்பதுண்டு. ஆனால் இந்த மூலிகை  டீயை குடித்து விட்டு படுப்பதால் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகிறது.

மூலிகை டீ செய்யும் முறை :

தேவையான பொருட்கள் :

  • வெந்நீர் – 1 கப்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • இலவங்கப் பட்டை – சிறிதளவு
  • கிராம்பு – சிறிதளவு

செய்முறை :

வெந்நீரில் இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றை கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த மூலிகை பொருட்களின் சாறு இறங்கும் வரை 20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

பயன்கள் :

கொழுப்பு :

இரவு உறங்குவதற்கு முன் இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைய பண்ணுகிறது.

சளி தொல்லை :

இந்த மூலிகை டீயை குடிப்பதனால் சளி தொல்லை நீங்குகிறது. உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.

நச்சுக்களை அளிக்கிறது :

இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால், நமது உடலில் உள்ள நச்சுக்களை அளிக்கிறது. இது நமது உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதயம் :

இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால் இதயத்தில் காணப்படும் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக விடுதலை அளிக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்