ஆரோக்கியமான கேரட் சட்னி ஐந்து நிமிடத்தில் செய்வது எப்படி...?

Learn how to make healthy carrot chutney in five minutes

காலை நேரத்தில் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்யும் பொழுது தொட்டு கொள்வதற்கு சட்னி அல்லது சாம்பார் செய்வது வழக்கம். பெரும்பாலும் பலர் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து இட்லி தோசைக்கு சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமான முறையில், அதே சமயம் அட்டகாசமான சுவை கொண்ட கேரட் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

துருவிய கேரட்

தேங்காய்

கொத்தமல்லி

பூண்டு

உப்பு

வேர்க்கடலை

எண்ணெய்

கடுகு

காய்ந்த மிளகாய்

செய்முறை

வறுக்க :முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு, அதே கடாயில் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அரைக்க :வறுத்த மிளகாய், கொத்தமல்லி, கேரட் ஆகியவற்றுடன் துருவிய தேங்காய், பூண்டு மற்றும் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிப்பு :அதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய்-கேரட் கலவையை அதில் கொட்டி லேசாக சூடு ஏறியதும் அணைத்து விடவும். அவ்வளவு தான் அட்டகாசமான கேரட் சட்னி வீட்டிலேயே தயார்.