ஓட்ஸ் வைத்து அட்டகாசமான காலை உணவு செய்வது எப்படி...?

Come learn today how we make oats in a different way.

ஓட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த ஓட்ஸை எப்படி செய்து சாப்பிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். பொதுவாக பலரும் பாலில் ஓட்ஸை சேர்த்து கலந்து சாப்பிடுவது தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இன்று நாம் எப்படி வித்தியாசமான முறையில் ஓட்ஸ் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

பால்

ஓட்ஸ்

பேரிச்சம் பழம்

தேன்

செய்முறை

முதலில் பாலை சூடாக்கி அதில் தேவையான அளவு ஓட்ஸை கலந்து மிதமான தீயில் வேக வைக்கவும். அதன் பின் இக்கலவையுடன் பேரிச்சம் பழத்தை சேர்த்து நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.

இதன் சூடு ஆறிய பின்பு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து, அதன் பின் இதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் அட்டகாசமான ஓட்ஸ் காலை உணவு தயார். தேவைப்பட்டால் நாம் பலன்களையும் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.