சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுகிறோம். அதில் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளான மீன், இறைச்சி போன்ற அசைவ

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுகிறோம். அதில் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளான மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில், சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

கட்லா மீன் துண்டுகள் – அரைகிலோ

வெங்காயம் – பாதி அளவு

மிளகாய்தூள் – அரை ஸ்பூன்

புண்ணை இலை – பாதி அளவு

மிளகு -3 அல்லது 4

தனியாத்தூள் – அரை ஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கட்லா மீன் துண்டுகளை சுத்தம் செய்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதோடு, மிளகாய்தூள், தனியாதூள், மிளகு, புன்னை இல்லை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

unknown node

இதில் உப்பு, அரைக்கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா வெந்து எண்ணெய் பிரியும் போது தேவையான கிரேவியின் அளவுக்கு தண்ணீர் ஒற்றி கொதிக்க விட வேண்டும். பின் கிரேவி நன்றாக கொதித்து வரும்போது, வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் போது இறக்கி விட வேண்டும்.