வெறும் 5 ரூபாய் தான் வித்தியாசம்! ஜியோவின் ரூ.195 vs ரூ.200 திட்டங்களில் எது பெஸ்ட்?

இரண்டு திட்டங்களில் முக்கியமானது என்றால் இவை இரண்டும் டேட்டா வவுச்சர்கள் மட்டுமே. இதில் இலவச அழைப்புகளோ (Free Calls) அல்லது SMS வசதிகளோ இல்லை.

Hero Image

டெல்லி : டெலிகாம் சந்தையில் தனது பயனர்களைக் கவரும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவ்வப்போது அதிரடி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்பொழுது ஓடிடி பிரியர்களைக் குறிவைத்து ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ரூ.195 மற்றும் ரூ.200 திட்டங்கள் சந்தையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் வெறும் ரூ.5 மட்டுமே என்றாலும், நன்மைகளில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இந்த இரண்டு திட்டங்களின் முழு விபரங்கள் மற்றும் உங்களுக்கான சிறந்த சாய்ஸ் எது என்பதைப் பார்ப்போம்...

ஜியோ ரூ.195 திட்டத்தின் விபரங்கள்

திரைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை அதிகம் விரும்பும் பயனர்களுக்காக இந்தத் திட்டம் பிரத்யேகமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

டேட்டா: இந்தத் திட்டத்தில் மொத்தம் 15 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.

ஓடிடி நன்மைகள்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலியைப் பயன்படுத்துவதற்கான 90 நாட்கள் இலவச சந்தா இதில் கிடைக்கிறது.

வேலிடிட்டி : இந்த டேட்டா பேக் 30 நாட்களுக்குச் செயலில் இருக்கும் (ஹாட்ஸ்டாரை மட்டும் 90 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்).

ஜியோ ரூ.200 திட்டத்தின் விபரங்கள்

இந்த திட்டத்தை பொறுத்தவரையில், கூடுதலாக வெறும் ரூ.5 மட்டுமே செலுத்துவதன் மூலம், பயனர்கள் இதில் அசாத்தியமான நன்மைகளைப் பெற முடியும்.

டேட்டா: ரூ.195 திட்டத்தில் 15 ஜிபி டேட்டா கிடைக்கும் நிலையில், இந்த ரூ.200 திட்டத்தில் சரியாக இரட்டிப்பாக 30 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது.

ஓடிடி ஆஃபர்: யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) உட்பட மொத்தம் 15 ஓடிடி செயலிகளுக்கு இதில் இலவச சந்தா கிடைக்கிறது.

நேரலை டிவி சேனல்கள்: ஜியோ டிவி (JioTV) செயலி மூலம் 150-க்கும் மேற்பட்ட கட்டணச் சேனல்கள் உட்பட, மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை இலவசமாகப் பார்க்கலாம்.

வேலிடிட்டி: இந்தச் சேவைகளை 28 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு திட்டங்களுமே முழுக்க முழுக்க ஓடிடி மற்றும் டேட்டாவிற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட 'டேட்டா வவுச்சர்கள்' ஆகும். எனவே, இந்தத் திட்டங்களில் இலவச அழைப்புகள் (Free Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகள் கிடைக்காது. அவையும் உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்களுடைய முதன்மை அன்லிமிட்டெட் திட்டத்துடன் சேர்த்து இதனை ஒரு ஆட்-ஆன் (Add-on) பேக் ஆக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

எது சிறந்தது?

உங்களுக்கு கிரிக்கெட் அல்லது படங்கள் பார்க்க ஜியோ ஹாட்ஸ்டார் மட்டும் போதும் என்றால் ரூ.195 திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால், உங்களுக்கு யூடியூப் பிரீமியம் முதல் 15 ஓடிடி தளங்களும், கூடவே 30 ஜிபி டேட்டாவும் வேண்டுமென்றால், கூடுதலாக 5 ரூபாய் செலவழித்து ரூ.200 திட்டத்தை எடுப்பதே மிகச்சிறந்த, லாபகரமான தேர்வாகும்.

வெறும் 5 ரூபாய் தான் வித்தியாசம்! ஜியோவின் ரூ.195 vs ரூ.200 திட்டங்களில் எது பெஸ்ட்?