கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம்.

kul kul recipe (1)

சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை -50 கிராம்

நெய்- 50 ml

மைதா -ஒரு கப்

சர்க்கரை- 100 கிராம்

எண்ணெய் -தேவையான அளவு

பால்- அரை கப்.

unknown node

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் நெய்யை சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும் .பிறகு அதில் எடுத்து வைத்துள்ள  மைதாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சர்க்கரையை பவுடராக்கி மாவில் சேர்த்து கலந்து விட்டு பால் அரைக்கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக சேர்த்து 15 நிமிடங்கள் வரை நன்கு பிசைந்து கொள்ளவும்.

unknown node

பிசைந்தவற்றை சிறு சிறு உருண்டைகள் ஆக்கி அதனை ஒரு ப்போக்  கரண்டியில் வைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும் .பிறகு பொறிக்க தேவையான அளவு எண்ணெயை காயவைத்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொறு மொறுவென கல்கல் ரெசிபி தயாராகிவிடும்.