கறுப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முகக் கருமையை போக்குவதற்கான  வழிமுறைகள்.

முகக் கருமையை போக்குவதற்கான  வழிமுறைகள்.

இன்று இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தங்களது கருமையான நிறத்தை எப்படி மாற்றுவது என்பது  தான். இதனால், இவர்கள் தங்களது பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்து க்ரீம்களை பயன்படுத்தி பல பக்கவிளைவுகளை தெடிக் கொள்கின்றனர்.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையான நிறத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

கேரட் – பாதி

கொய்யா பழம் – 1

செய்முறை

முதலில் ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் ஒரு கொய்யா பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதன் பின் வறட்சியான நிலையை தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.