தொடர் கனமழை மழை எதிரொலி ! கன்னியாகுமரி,சிவகங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையால் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை

கனமழையால் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று  ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர் கனமழை மழை எதிரொலி ! கன்னியாகுமரி,சிவகங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை