நாளை ஒளிபரப்பை தொடங்குகிறது மாணவர்களுக்கான தனிச் சேனல்

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளி பரப்பாக உள்ளது.

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளி பரப்பாக உள்ளது.

பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு தனிச் சேனல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் பின் மாணவர்களுக்கான தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது . இந்த சேனலுக்கு கல்வி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.கல்வி சேனலுக்கு ஒரு கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

unknown node

இந்த நிலையில் நாளை  சேனல் தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வழங்கினார்.