வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 19-ல் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை மார்ச் மாதத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது. இதுகுறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
unknown node