மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக […]
Anna University: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம் Michaung) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை […]
அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியாக முன்னெஞ்சறிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல். – அமைச்சர் பொன்முடி. சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உறுப்பு கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர், ‘ அந்த ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக […]
ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு வரும் […]
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக […]
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இதுவே திராவிட மாடல் அரசின் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டை செழிக்க செய்யக்கூடிய வல்லுநர்கள் மாணவர்கள்தான். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கல்விக் கண்ணை திறப்பதை பெரும் பணியாக எண்ணியே திராவிடம் மாடல் அரசு செயல் பட்டு வருகிறது. அனைவருக்கும் […]
முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் 69 மாணவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கவுள்ளார். 70 ஆண்டுகளுக்கு […]
பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். பிரதமர் அவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ள நிலையில், 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில், தமிழக […]
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலின்படி,சென்னை கிண்டி,குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரு இடத்தை பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து,பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் காண https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf இங்கே க்ளிக் செய்யவும்.
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் […]
அண்ணா பல்கலைக்கழகம் தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி உள்ளது. கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு உயர்த்தியுள்ளது. அதனபடி, தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் […]
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும்,தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: “25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளது.தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார். மேலும்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக […]
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் […]